Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீரசாகச விளையாட்டுக்களில், நிலையாக நிற்கும் உயரமான பொருட்கள் அல்லது கட்டிடங்களில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை செய்வது, "பேஸ் ஜம்பிங்" (BASE jumping) எனப்படும்.
பில்டிங், ஆன்டெனா, ஸ்பான் (பாலங்கள்), எர்த் (மலைகள்) ஆகியவற்றின் சுருக்கமே "பேஸ்" எனப்படும்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பேஸ் ஜம்பிங்க் விளையாட்டில் உயிரை பணயம் வைத்து ஈடுபடுவதும், அந்த வீடியோ காட்சிகளை தங்களின் சமூக வலைதள கணக்கில் வெளியிட்டு பயனர்களின் பாராட்டுகளை அதிக அளவில் பெறுவதும் அதிகரித்து வருகிறது.
இது ஒரு சிலருக்கு வருவாய் ஈட்டும் வழியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் 29 தள அபார்ட்மென்டிலிருந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 33-வயதான நபர் பேஸ் ஜம்பிங் விளையாட்டில் ஈடுபட்டார்.
அந்த கட்டிடத்தின் மேல் மாடிக்கு தனது நண்பர்களுடனும், பாராசூட் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடனும் சென்றார். அவரது சாகசத்தை நண்பர்கள் படம் பிடிக்க உடன் சென்றனர்.
அவர்கள் வீடியோ எடுக்க தொடங்கிய நிலையில், அந்த நபர் பாராசூட்டுடன் கீழே குதித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கீழே குதித்து தரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரது பாராசூட் செயல்படவில்லை. இதனால், அவர் அங்கிருந்த ஒரு மரத்தில் விழுந்து, பின் அதிலிருந்தும் கீழே தரையில் விழுந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு திறக்காத நிலையில் ஒரு நீல நிற பாராசூட்டையும், அந்த நபரின் சடலத்தையும் மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் நேதி ஓடின்சன் என்பதும், அவரின் சமூக வலைதளங்களை ஆராய்ந்ததில் அவர் இது போன்ற பாராசூட் விளையாட்டுக்களில் அனுபவமிக்க நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
36 minute ago
2 hours ago