2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வுஹான்-ல் மீண்டும் கொரோனா

Editorial   / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனா பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

இதேவேளையில் 2 முறை என 10 வருடங்கள் தொடர்ந்து சீன ஜனாதிபதியாக இருந்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 3வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த உடனே நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் பணிகளைச் செய்வார், தைவான் உடனான பிரச்சனைக்கு முடிவு கட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் வுஹானில் மீண்டும் கொரோனா பரவியுள்ள செய்தி மூலம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 
 கொரோனா தொற்று எண்ணிக்கை உலக நாடுகளில் குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் மட்டும் இன்னும் கொரோனா தொற்று உச்சம் தொட்டு இருந்த காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த ஜீரோ கோவிட் பாலிசி இன்னும் தொடரப்பட்டு வருகிறது.

கடந்த 4 வாரத்தில் சீனாவில் மேற்கு பகுதியில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அடுத்தடுத்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சீனாவில் நீண்ட விடுமுறைக் காலத்தில் மக்கள் அதிகளவில் பயணம் செய்துள்ள நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 இந்த நிலையில் கொரோனா தொற்றின் GROUND ZERO ஆகக் கூறப்படும் வுஹானில் மீண்டும் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் சீன அரசு தனது கடுமையான ஜீரோ கோவிட் பாலிசியை நடைமுறைப்படுத்தித் தொற்று இருக்கும் மாநிலத்தை மொத்தமாக லாக்டவுன் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியதாகக் கூறப்படும் வுஹான் பகுதியில் 3 வருடத்திற்குப் பின்பு கொரோனா தொற்று பாதிப்பால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

வுஹான் மாகாணத்தில் Hanyang என்ற மாவட்டத்தில் தான் தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுச் சுமார் 9 இலட்சம் குடும்பங்கள் கொண்ட மாவட்டத்தை மொத்தமாக லாக்டவுன் செய்யப்பட்டு உள்ளது.

 இந்த லாக்டவுன் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரையில் தொடரும் என்றும் அதுவரையில் மக்களுக்கு அடிப்படைத் தேவைக்கான கடைகள் மற்றும் சேவைகள் மட்டுமே கிடைக்கும், மற்ற அனைத்து கடைகளும், அமைப்புகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

Hanyang மாவட்டத்தில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சுற்றுலா தளங்கள் இருக்கிறது, தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். செவ்வாய்க்கிழமை வெளியான தரவுகள் படி சீனாவின் வுஹான் மாகாணத்தில் சுமார் 18 பேர் கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் சீன அரசுக்குக் கொரோனா கட்டுப்படுத்த ஜீரோ கோவிட் பாலிசி பெரிய அளவில் நன்மை அளித்தது உண்மை தான்.

ஆனால் தற்போது தடுப்பூசி முன்னெச்சரிக்கை, தேவையான மருத்துவச் சிகிக்சை வசதிகள் இருக்கும் போதும் சிறிய அளவிலான தொற்று எண்ணிக்கை பாதிப்பிற்கும் ஜீரோ கோவிட் பாசிலி என்பது அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், மக்களின் வருமானம் என அனைத்தையும் பாதிக்கிறது. இது பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்ட நிலையிலும் ஜி ஜின்பிங் 3வது முறையாகச் சீன ஜனாதிபதி பதவி பெற்றுள்ளார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X