Freelancer / 2026 ஜனவரி 05 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் அதிரடியாகத் தாக்கிப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று (05) அவசரமாகக் கூடவுள்ளது.
வெனிசுவேலா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய அமெரிக்க இராணுவம், மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அந்டோனியோ குட்டெரஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வெனிசுவேலா தூதுவர் சாமுவேல் மொன்காடா எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவின் இந்தச் செயல் தங்கள் நாட்டின் குடியாட்சியை அழித்து, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கும் காலனித்துவப் போர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது பலத்தை பிரயோகம் செய்வது ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பின்னணியில் கொலம்பியா விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன் இந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. (a)
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago