2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டில் கைதாகும் பாகிஸ்தான் யாசகர்கள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளுக்குள் செல்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து அங்கு அவர்கள் யாசகம் கேட்கத் தொடங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோன்று ஜப்பான் நாடுகளுக்கும் இதே நோக்கத்துடன் பாகிஸ்தானியர்கள் செல்வதாகவும் பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் முடிச்சு மாற்றிகள்  மற்றும் அனுமதியில்லாத இடங்களில் யாசகம் பெறுபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று ஜப்பான் நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் பாகிஸ்தானியர்கள் பிடிபட்டுள்ளார்கள்.

அவ்வாறு வெளிநாட்டில் யாசகம் பெறுபவர்கள், உடல் உறுப்புக்காக கடத்தப்படுவதாகவும் பாகிஸ்தானை சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X