2025 நவம்பர் 05, புதன்கிழமை

வெள்ளி வரை ப. சிதம்பரத்தின் சி.பி.ஐ காவல் நீடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான ப. சிதம்பரத்துக்கு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்திய நடுவண் புலனாய்வுச் செயலக (சி.பி.ஐ) காவலை நீடித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்பிணை மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இம்மாதம் 20ஆம் திகதி தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகள் ப. சிதம்பரத்தை அவருடைய டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து கைது செய்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை ஆஜர்படுத்தினார்கள். அவரை ஐந்து நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் வைத்து ப.சிதம்பரத்தை, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

ஐந்து நாட்கள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

இதன்போதே ப. சிதம்பரத்தை எதிர்வரும் வெள்ளிகிழமை வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X