2025 நவம்பர் 05, புதன்கிழமை

வெள்ளை மாளிகை பாதுகாப்பு அனுமதிகளில் பாரிய மீறல்கள்?

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரதான ஆலோசகர்கள் உள்ளடங்கலாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் 25 பேரின் பாதுகாப்பு அனுமதிகளை வழங்குவதற்கெதிராக பணியாளர்களின் பரிந்துரைகள் இருந்தபோதும், பாதுகாப்பு அனுமதிகள் வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரி ட்ரிசியா நியூபோல்ட், பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் மட்டங்களில், தேசிய பாதுகாப்பில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ட்ரிசியா நியூபோல்ட் தமது பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவிடம் வெளிப்படுத்தியதாக, கடிதமொன்றின், பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் தலைவர் எலிஜா கியூமிங்ஸ் கடிதமொன்றில் நேற்று முன்தினம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், 25 பேரில் எவரும் பெயரிடப்படாதபோதும், வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர் பற் சிபொலொன்னேக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், முன்னார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளின், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவங்கா ட்ரம்ப், ஜனாதிபதி ட்ரம்ப்பின் மருமகன் ஜரெட் குஷ்னர், சில உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு அனுமதிகள் தொடர்பான தகவல்களை எலிஜா கியூமிங்ஸ் கோரியுள்ளார்.

இதேவேளை, வெள்ளை மாளிகையின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலகத்தில் ட்ரிசியா நியூபோல்டின் முன்னாள் உயரதிகாரியான கார்ள் கிளினை ஏனைய அதிகாரிகளுடன் பாதுகாப்பு அனுமதிகள் தொடர்பாக பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் விசாரணை செய்ய அழைக்கவுள்ளதாக எலிஜா கியூமிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X