2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு: தப்பினார் ட்ரம்ப்

Editorial   / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தை அடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வாஷிங்டனில் உள்ள 'வாஷிங்டன் ஹில்டன்' (Washington Hilton) ஹோட்டலில் நடைபெற்ற 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின்' வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரங்கிற்குள் திடீரென துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தம் கேட்டவுடன், அங்கிருந்த அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் உடனடியாகத் தரையில் விழுந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.


சத்தம் கேட்ட அடுத்த சில நொடிகளில் பாதுகாப்புப் பிரிவினர் அதிரடியாகச் செயற்பட்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோரை மேடையிலிருந்து அகற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தின் போது துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றிப் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவி வெய்ஜியா ஜியாங், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு மீண்டும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .