2025 மே 16, வெள்ளிக்கிழமை

வேகமாக பரவும் புதிய இதய நோய்; பெற்றோர்களே உஷார்

Ilango Bharathy   / 2023 மே 22 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதயத்தில் ஏற்படும் ஒருவித வைரஸ்  தொற்றால்,  ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு சிறுவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பிரித்தானியாவில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு வேல்ஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தில் இப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்தில் இருக்கும் வீக்கம் ,அலர்ஜியை ஏற்படுத்தும் ஒரு வகை நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நோய் பதினைந்து குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 9 பேருக்கு எண்டோ வைரஸ் இருப்பது உறுதியானது.

இந்த வைரஸ் சுவாச நோய் மற்றும் கை மற்றும் கால்கள் தொடர்பான நோய்கள், மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .