2025 நவம்பர் 05, புதன்கிழமை

வேதாரண்யத்தில் சாதி மோதல்களில் 37 பேர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகபட்டின மாவட்டத்திலுள்ள வேதாரண்யமில் அம்பேத்கர் சிலையொன்று நேற்று மாலை உடைக்கப்பட்ட வன்முறையுடன் தொடர்புடைய 37பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் தலித்துகள் எனவும் ஏனையோர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் தகவல் மூலங்கள் கூறுகின்றப,

தலித் சமூகத்தைச் சேர்ந்த பாதசாரி காயமடைந்த வேதாரண்யம் பொலிஸ் நிலையத்துக்கு அருகே இடம்பெற்ற விபத்தொன்றால் தோன்றிய வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்து சமூகத்தைச் சேர்ந்தவரின் வாகனமொன்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் எரிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே வன்முறை இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் ஓட்டுநர் அடைக்கலம் தேடிய நிலையில், காயமடைந்தவரின் ஆதரவாளர்கள், பொலிஸ் நிலையத்தின் மீது கற்களை எறிந்ததுடன் வாகனத்தை எரித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த செய்தி விரைவாகப் பரவிய நிலையில் பாரிய எண்ணிக்கையில் கூடிய இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறெனினும், சம்பவம் இடம்பெற்று 12 மணித்தியாலங்களுக்குள் புதிய அம்பேத்கர் சிலையை நாகபட்டின மாவட்ட நிர்வாகம் பிரதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X