Editorial / 2019 மார்ச் 28 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேற்கு யேமனிலுள்ள வைத்தியசாலையொன்றுக்கரு இடம்பெற்ற வான் தாக்குதலொன்றில், நான்கு சிறுவர்கள் உள்ளடங்கலாக குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளநிலையில், குறித்த தாக்குதலை சேவ் த சில்ரன் அமைப்பு கண்டித்துள்ளது.
இந்நிலையில், இவ்வைத்தியசாலையின் நுழைவாயிலுள்ள அருகிலுள்ள பெட்ரோல் நிலையமொன்றை ஏவுகணையொன்று தாக்கியமையைத் தொடர்ந்து இரண்டு வயது வந்தவர்களைக் காணவில்லை என குறித்த வைத்தியசாலைக்கு நிதியளிப்பதற்கு உதவுககின்ற அரசசார்பற்ற நிறுவனமான சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.
சாடா நகரத்திலிருந்து ஏறத்தாழ 100 கிலோ மீற்றர் தூரத்திலேயே கிடாஃப் வைத்தியசாலை திறந்த அரைமணித்தியாலத்தில், ஏவுகணை தாக்கியபோது பல நோயாளிகளும் பணியாளர்களும் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்துள்ளன.
அந்தவகையில், உயிரிழந்தோரில் தனது இரண்டு பிள்ளைகளுடனும் உயிரிழந்த சுகாதாரப் பணியாளரொருவரும் உள்ளடங்குவதாக சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யேமனியில் ஹூதிப் போராளிகளுடன் போராடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியாலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகையில், இத்தாக்குதலில் எட்டுப் பேர் காயமடைந்தும் உள்ளனர். யேமனின் வான்பரப்பின் ஏறத்தாழ முற்றுமுழுதான கட்டுப்பாட்டை கூட்டணியே கொண்டுள்ளது.
இதேவேளை, கடந்தாண்டு வெளிநாட்டுக் குண்டுகளால் மாதமொன்றில் 37 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக அல்லது காயமடைந்ததாகத் தெரிவித்துள்ள சேவ் த சில்ரன், குறித்த ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக உடனடி விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளது
19 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
1 hours ago