2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வைர ரதத்தில் வலம் ஆரம்பமானது

Freelancer   / 2023 மே 06 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

70 ஆண்டுகளில் முதல் முடிசூட்டு விழாவுக்காக 100 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 2,300 பேர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் காத்திருக்கும் நிலையில் பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமீலாவும் குதிரைகள் பூட்டப்பட்ட வைர ரதத்தில் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை நேரப்படி 3.30க்கு ஆரம்பமான நிகழ்வு 2 மணி நேரம் வரை இடம்பெறவுள்ள நிலையில் லண்டனில் உள்ள ஊர்வலப் பாதையில், மன்னரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறபட்ட ரதம், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

2014ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட வைரவிழா ரதத்தில் விழாவுக்குச் செல்லும் மன்னர், கடந்த 1830ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு முடிசூட்டு விழாவுக்கும் பயன்படுத்தப்படும் தங்க ரதத்தில் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X