2025 மே 12, திங்கட்கிழமை

‘ஸிலென்ஸ்கியைக் கொல்லும் ரஷ்யத் திட்டம் முறியடிப்பு’

Shanmugan Murugavel   / 2024 மே 07 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி, ஏனைய உயர் மட்ட உக்ரேனிய அதிகாரிகளைக் கொல்லும் ரஷ்யத் திட்டமொன்றைத் தாங்கள் முறியடித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் சேவை தெரிவித்துள்ளது.

உக்ரேனிய அரசாங்க பாதுகாப்புப் பிரிவின் இரண்டு கேணல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரஷ்ய அரச பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த முகவர் வலையமைப்பொன்றின் பங்கு என உக்ரேனிய பாதுகாப்புச் சேவை தெரிவித்துள்ளது.

ஸிலென்ஸ்கியுடைய மெய்ப்பாதுகாவலர்களில் அவரைக் கடத்திக் கொல்லக்கூடியவர்களை இவர்கள் தேடியதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X