Editorial / 2018 மே 24 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் தூத்துக்குடி மாநிலத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்குவதற்கு, அந்நிறுவனம் விடுத்திருந்த கோரிக்கைக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
அவ்வாலைக்கெதிராக, தூத்துக்குடி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதன்போது 11 பேர் கொல்லப்பட்ட மறுநாள், இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலுள்ள தமது ஆலையை விரிவாக்குவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்குமாறு, இவ்வாண்டு பெப்ரவரியில், இந்நிறுவனம் விண்ணப்பத்திருந்தது.
உருக்கு ஆலையின் கொள்திறனை, ஆண்டுக்கு 800,000 தொன்களை உருக்கும் அளவுக்கு உயர்த்துவதே, இக்கோரிக்கையின் தேவையாகும். இக்கோரிக்கைக்கே இப்போது மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், அந்நிறுவனத்தின் தலைமை நிறுவனமான வேதந்தா நிறுவனத்தின் பங்குகள், 10 மாதங்களில் பெறப்பட்ட மோசமான சரிவைச் சந்தித்துள்ளன.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025