2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஸ்டெர்லைட்டுக்கான நில ஒதுக்கீடு இரத்து

Editorial   / 2018 மே 30 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நில ஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவை, தமிழக அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை செயற்பட நிரந்தரமாகத் தடை விதித்து சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலைக்கு ஒதுக்கப்பட்ட நில ஒதுக்கீடு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நில ஒதுக்கீட்டுக்காக, ஆலை நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட பணம், விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

2005, 2006, 2009, 2010ஆம் ஆண்டுகளில், ஆலையின் 2வது அலகு விரிவாக்கத்துக்காக 342.22 ஏக்கர் நிலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டமையே, இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X