Freelancer / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில், 95 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூர தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (30) பெய்த அடைமழை காரணமாக, மலாகாவில் இருந்து வாலென்சியா வரை வெள்ளக்காடாக காட்சியளித்தன.
பொலிஸ் மற்றும் மீட்புப்படையினர் ஹெலிகொப்டர் உதவியுடன் வெள்ளத்தில் தவித்த மக்களை காப்பாற்றினர்.
வாலென்சியாவில் உள்ள 12க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்ற பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago