S.Renuka / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், 'நுஸுக்' அட்டைகளில் புதிய விதிகளை சவூதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான சவூதியில் உள்ள மக்காவுக்கு மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் வருகின்றனர்.
இதற்காக யாத்ரீகர்களுக்கு, 'நுஸுக்' என்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. யாத்திரை சேவைகளை மேம்படுத்தும் விதமாக இந்த அடையாள அட்டையை நவீனமயமாக்க சவுதி முடிவு செய்துள்ளது.
ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிக்க, 'நுஸுக்' அட்டையின் புதிய மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தை கட்டாயமாக்கி, அதற்கான புதிய விதிகளை அந்நாட்டு ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு, 'மொபைல் போன்' வாயிலாக டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவூதி வந்த உடன் அச்சிடப்பட்ட வடிவிலும் அட்டை வழங்கப்படும்.
இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுதும் யாத்ரீகர்கள் எப்போதும் தங்கள் உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ நுஸுக் அட்டையை உடன் வைத்திருக்காத யாத்ரீகர்களுக்கு, சவூதி அரேபிய அதிகாரிகள் வாயிலாக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சேவைகள் மறுக்கப்படலாம். எனவே, அனைத்து யாத்ரீகர்களும் இந்த விதிக்கு கண்டிப்பாக கட்டுப்படுவது அவசியம் என இந்திய ஹஜ் குழுவும் அறிவுறுத்தியுள்ளது.
8 hours ago
08 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
08 Dec 2025