2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஹமாஸ் - இஸ்ரேல் மறைமுக பேச்சு

Freelancer   / 2025 ஜூலை 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் முன்மொழிந்த பல திருத்தங்களை நிராகரித்த போதிலும், ஹமாஸுடன் மறைமுக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேல் நேற்று கட்டாருக்கு குழுவொன்றை அனுப்பியுள்ளது.

இராஜதந்திர தடைகள் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற மோதலைத் தணிக்க, கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தர்கள், தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மேற்படி பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்தம் தொடர்பில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .