2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹமாஸுக்கு கெடு விதித்தார் ட்ரம்ப்

Freelancer   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால்,  நரக விலை கொடுக்க நேரிடும் என்று, ஹமாஸுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இந்தப் பணய கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். பணய கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. 

  ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு நிபந்தனை விதித்துள்ளது. 

ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அழித்து, பணய கைதிகளை மீட்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'நான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்பு பணய கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் ஆயுதக்குழு) மீது, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று, டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X