Freelancer / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப், தனது உடல்நிலை குறித்த விரிவான தகவல்களை வெளியிட மறுத்து வரும் நிலையில், கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை கமலா ஹாரிசின் டாக்டர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார்.
அதில், “கமலா ஹாரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார்.
“அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.
“ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து உள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரிசுக்கு முன்பு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வயது ஆகிவிட்டதாக டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே, கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளதால், தற்போது டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago