2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம் ; 50 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணொருவர் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

 இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து   ஆயிரக்கணக்காக பெண்கள் தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக  பெண்கள் பலர் ஹிஜாபைக் கழற்றி எறிந்தும் அதனை தீயிட்டு எரித்தும், தலைமுடியை வெட்டியும்  தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தும் பெண்கள் மீது காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். 

அதன்படி, தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X