Freelancer / 2024 நவம்பர் 17 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிஜாப் அணியாத பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது
ஈரான் நாட்டில், இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றாக்கப்பட்டு உள்ளது. இதை அந்நாட்டு அரசு கடுமையாக செயற்படுத்தி வருகிறது. அதேநேரம் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஹிஜாப் விதியை நீக்க வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே ஹிஜாப் விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மனநல சிகிச்சை மையத்தைத் திறக்க உள்ளதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதற்காக ஹிஜாப் சிகிச்சை கிளினிக் நிறுவப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி கூறியுள்ளார்.
இந்த கிளினிக்குகளில், ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஈரானிய பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி ஆடைக்கப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உள்ளாடைகளுடன் வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகமும், அரசும் அந்தப் பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்று முத்திரை குத்தியது. அந்த மாணவி யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈரான் அரசின் இந்த அறிவிப்புக்கு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஈரான் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹுசைன் ரைசி கூறுகையில், "ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க வைத்தியசாலை அமைப்பது என்பது ஈரான் சட்டத்திற்கு மட்டுமின்றி இஸ்லாமிய சட்டத்திற்குமே எதிரான ஒன்று" என்றார்.
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
56 minute ago
2 hours ago