Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மேற்கு சவூதி அரேபிய நகரங்களான ஜிஸான், அப்ஹாவை நோக்கி ஈரானுடன் இணைந்த ஹூதிக்களால் ஏவப்பட்ட மூன்று ட்ரோன்களை, யேமனில் போரிடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி இடைமறித்து வீழ்த்தியதாக சவூதி அரேபியாவின் அரச தொலைக்காட்சி இன்று (17) தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்மேற்கு சவூதி அரேபிய நகரமான காமிஸ் முஷைட்டுக்கு அருகிலுள்ள அரசர் காலிட் வான் தளம், ஜிஸான் விமானநிலையத்தின் ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களை இலக்கு வைத்த ட்ரோன் தாக்குதல்களை ஹூதிகள் மேற்கொண்டதாக அக்குழுவின் இராணுவப் பேச்ச்சாளரொருவரை மேற்கோள்காட்டி ஹூதிகளின் அல் மஸிராஹ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்களையும், அப்ஹா, ஜிஸான், நஜ்ரானிலுள்ள சிவில் விமானநிலையங்களை ஹூதி ஆயுதக்குழுக்கள் தொடர்ந்தும் இலக்கு வைப்பதாகவும், பிராந்திய, சர்வதேச பாதுகாப்புக்கு தொடர்ந்தும் ஆபத்தாக இருப்பதாக கூட்டணியின் பேச்சாளர் துர்கி அல்-மல்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னதாக ஜிஸான் நோக்கி ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்களை யேமனிய வான்பரப்பில் வீழ்த்தியதாக கூட்டணி கூறியிருந்தது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago