Freelancer / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அதன் விமானி உயிரிழந்துள்ளார்.
வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலில் நீச்சல் குளம் அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஹெலிகொப்டர் விழுந்த வேகத்தில் தீப்பற்றி எறிய தொடங்கிய நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அங்கிருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.S
8 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago