Freelancer / 2026 ஏப்ரல் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி நேற்று அறிவித்துள்ளார்.
இந்த 10 நாள் போர்நிறுத்தக் காலம் முழுவதும் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதை முழுமையாகத் திறந்துவிடப்படும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதை அவரும் தனது சமூக வலைதளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். (a)
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago