2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹாட் அன்ட் சொப்ட் 23 ஓட்டங்களாள் வெற்றி

Super User   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.சுகிர்தகுமா்


அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய 10 பந்துப்பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சவால் கிண்ணம் 2014 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஹாட் அன்ட் சொப்ட் கழகம் சம்பியனானது.

ஜொலிபோய்ஸ் கழகம் வருடாந்தம் நடாத்துகின்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி தர்மசங்கரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

விலகல் முறையில் நடைபெற்ற போட்டிகளின்  32 கழகங்கள் பங்கு பற்றியதுடன் இறுதிச் சுற்றுக்கு ஜொலிபோய்ஸ் அணியும் அக்கரைப்பற்று ஹாட் அன்ட் சொப்ட் அணியும் தெரிவாகின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஹாட் அன்ட் சொப்ட் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிபோய்ஸ் அணியினர் 10 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் 8 இலக்குகனை இழந்து 94 ஓட்டங்களை பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.

இச்சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹாட் அன்ட் சொப்ட் அணியின்  எம்.ஜ.சகாப்தீனும் தொடர் ஆட்டநாயகனாக ஜொலிபோய்ஸ் அணியின்  எஸ்.நோவிராகவனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக ஆரியதாஸா டட்லியும் அதிதிகளாக ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஓய்வு பெற்ற வீரர்களும் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .