2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் 25ஆவது வருட பூர்த்தியின் வெள்ளிவிழா

Gavitha   / 2014 நவம்பர் 07 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கடற்கரை வீதி லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் 25ஆவது வருட பூர்த்தியின் வெள்ளிவிழா நிகழ்வுகள் மற்றும் வருடாந்த பொதுக்கூட்டம் என்பன புத்தளம் வளர்பிறை மீனவர் சங்கக்கட்டடத்தில், அதன் தலைவர் ஏ.எம். அன்சார் தலைமையில் வியாழக்கிழமை (06) இரவு இடம்பெற்றது.

சமய பிரார்த்தனையுடன் ஆரம்பான இக்கூட்டத்தில் கழகத்துக்கு அரும் தொண்டாற்றி, உயிர் நீத்த முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களுக்காக இரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

லிவர்பூல் கழகம் கடந்த 25 வருடங்கள் சாதித்த சாதனைகள் அதன் வரலாறுகள் என்பவற்றை அதன் தலைவர் ஏ.எம். அன்சார் சபையில் விபரித்தார்.
2014இல் புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்திய தொடரான மூன்று சுற்று போட்டிகளிலும் லிவர்பூல் அணி சாம்பியனாகி லீக் வரலாற்றில்  சாதனை படைத்தமைக்காக, அதன் வீரர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

கடந்த நிர்வாக காலத்தில், கழகம் வளர்ச்சிப்பாதையில் சென்றுள்ளதை சுட்டிக்காட்டி இதே நிர்வாகம் அடுத்து வரும் காலத்துக்கும் பதவி வகிக்க வேண்டும் என்று சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், பழைய நிர்வாகம் மீண்டும் புதிய நிர்வாக சபையாக தெரிவானது. அத்தோடு புதிதாக மூன்று உறுப்பினர்களும் சபைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன் பிரகாரம் ஏ.எம்.அன்சார் தலைவராகவும் கே.எம். ஹிஸாம் செயலாளராகவும் ஏ.ஆர்.எம். நில்பான் பொருளாளராகவும் மொத்தம் 15 உறுப்பினர்களோடு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .