2025 ஜூலை 09, புதன்கிழமை

றக்பி கார்னிவெல் -2014

Kogilavani   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

றக்பி கார்னிவெல் -2014 நிகழ்வு, சம்பாந்துறை, அல்-ஹிதாயா மகா வித்தியாலய மைதானத்தில் புதன்கிழமை (24) இடம்றெவுள்ளதாக சம்மாந்துறை வலய கல்வி அலுவலக உடற் கல்வி ஆசிரிய ஆலோசகரும் றக்பி இணைப்பாளருமான கே.எம்.எஸ்.நஜ்ஜாஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள 16 பாடசாலைகள் மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து 450 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச சபை உபதவிசாளர் ஏ.ஆனந்தன் ஆகியோர்களின் அனுசரணையுடன் இடம்பெறும் இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

முதன்முறையாக நடைபெறவுள்ள றக்பி கார்னிவெல்  நிகழ்வில் வலயத்திலுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .