Princiya Dixci / 2017 ஜனவரி 22 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது, பாடசாலைக்குச் சென்று பாடசாலையில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25ஆவது ஆண்டுநிறைவு விழா நடைபெற்றது.
சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான சனத் ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட மெதடிஸ்த மத்திய கல்லூரி பாடசாலையின் அதிபர் பி.விமல்ராஜ், பழைய மாணவர்கள், சென்றலைட் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் முதல் பாடசாலையென்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு சென்றலைட் விளையாட்டுக்கழகம் உருவாக்கப்பட்டது.
இதன்போது சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நினைவு மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் பிரகாசித்துவரும் இளம் வீரர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டதுடன், விளையாட்டுத்துறைக்கு அர்ப்பணிப்புகளைச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
9 minute ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
06 Mar 2026