2025 ஜூலை 16, புதன்கிழமை

15 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மாவட்ட சம்பியனாகியது

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம்  நடத்திய மாவட்ட மட்டத்திலான 15வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி திருகோணமலை மாவட்ட சம்பியனாகியது.

6 பாடசாலை அணிகள் பங்குகொண்ட மாவட்ட மட்ட தொடரின் இறுதி போட்டியில் கிண்ணியா அல்.அக்ஸா கல்லூரியை எதிர்த்து விளையாடி சம்பியன் நிலையினை அடைந்தது.

திருகுகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் கொல்கள் பெற்றுக் கொள்ளாத நிலையில் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது.

வெற்றியை தீர்மானிக்க தண்டணை உதைகள் வழங்கப்பட்டது. இதன்போது, கிண்ணியா மத்திய கல்லூரி 3 கோல்களையும் அல் – அக்ஸா கல்லூரி 1 கோல்களையும் போட்டு வெற்றிபெற்றது.

மாவட்ட மட்ட போட்டி தொடரில் முள்ளிப்பொத்தானை, புகாரி நகர் வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை அல் - சபா வித்தியாலயம், இறக்கண்டி அல் - ஹம்றா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை வித்தியாலோக ராஜகீய வித்தியாலயம் ஆகியவற்றின் அணிகளும் பங்குகொண்டன.

இம்மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் பதுளை வின்சன் டயஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி தொடரில் கிண்ணியா மத்திய கல்லூரி பங்குபற்றவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X