2025 ஜூலை 02, புதன்கிழமை

198 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

வடிவேல் சக்திவேல்   / 2019 ஜூன் 23 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது, மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப்பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு மத்தியில் இந்நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வின்போது, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 95 உத்தியோகத்தர்களும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த103 உத்தியோகத்தர்களுமாக 198 பேருக்கு   நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நியமனங்களைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுப் பயிற்சிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மாகாண விளையாட்டு இணைப்பாளர்கள், விளையாட்டு பிரிவின் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .