2025 ஜூலை 16, புதன்கிழமை

2 - 0 என்ற வித்தியாசத்தில் கொழும்பு ஓல்பென்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் 2011ஆம் ஆண்டிற்கான பிரிவு - 01 பிரீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டி நேற்று சனிக்கிழமை கல்முனை மாநகர ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் கொழும்பு ஓல்பென்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் ஆகியன மோதின.
இதன்போது கொழும்பு ஓல்பென்ஸ் விளையாட்டுக் கழகம் 2 கோல்களை போட்டு கல்முனை பிர்லியன்ட்  விளையாட்டு கழகத்தை 2 - 0 என்ற வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இப்போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X