2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2 பிரிவுககளிலும் சம்பியனாகியது தெல்லிப்பழை யூனியன்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன், குணசேகரன் சுரேன்

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில், 17, 20 வயதுக்குட்பட்டது என இரண்டு பிரிவுகளிலும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியது. 

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தை வென்று தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் முதலாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி 25-07 என்ற புள்ளிகள் கணக்கில் இச்செட்டைக் கைப்பற்றியது.  

இரண்டாவது செட்டில் சுதாகரித்துக் கொண்ட இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, 25-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பெற்றது. 

இந்நிலையில், 20 வயதுக்குட்பட்டடோருக்கான இறுதிப் போட்டியிலும் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தை வென்றே தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியது.

இப்போட்டியின் முதலாவது செட்டில் 25-10 என்ற புள்ளிகள் கணக்கில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கைப்பற்றியபோதும், இரண்டாவது செட்டை 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் வென்றது.

இந்நிலையில், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனானது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் பெற்றது.

இவ்வாண்டுக்கான சிறந்த எறிபந்தாட்ட வீராங்கனையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பி. ரேணுகா தெரிவானார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .