Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகத்தின் வெள்ளி விழாவையொட்டி யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தப்படும் இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் தெரிவாகியுள்ளது.
கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 30 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது. இ.உமாதரன் 68, டிலக்சன் 56 மணிவண்ணன் 54 அருண் 21 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 22 ஓட்டங்களும் பெறப்பட்டன.
ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விஸ்னுபிரகாஸ் நிரோஐன் தலா 6 ஓவர்கள் பந்து வீசி முறையே 50, 51 ஓட்டங்களைக்கொடுத்து தலா 02 விக்கெட்டக்களையும் புருசோத்தமன் 2 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சஞ்சயன் 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். வெற்றி பெறுவதற்கு 259 என்ற பெரு இலக்குடன் களமிறங்கிய ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 27.2 ஓவரில் 183 ஓட்டங்களை மாத்திரம் இழந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பெற்றது. அவ்வணியின் சார்பில் கே.நிரோஜன் 59 ஜெனக்சன் 28 ரி.நிரோஜன் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் உதிர்களாக 15 ஓட்டங்களும் பெறப்பட்டன.
ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த உமாதரன் 6 ஓவர்கள் பந்து வீசி 36 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் ஜனார்த்தனா 4.1 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சைலேஸ்வரன், சஞ்சித் முறையே 27, 49 ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago