Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகளை அதிகரிக்கும் செயற்றிட்டம் கல்வியமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக வடமாகாணப் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சிநெறி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளைமறுதினம் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள இப்பயிற்சிநெறி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட ஆறு விளையாட்டுக்களுக்கான பயிற்சிகள் கொழும்பிலிருந்து வருகை தரும் பயிற்சியாளர்களினால் வழங்கப்படவுள்ளன. வலைப்பந்தாட்டம், ஜீம்னாஸ்ரிக், ரக்பீ, மெய்வன்மை, கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் ஆகிய ஆறு விளையாட்டுக்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
வடமாகாண கல்வி வலயங்களிலிருந்து ஒவ்வொரு விளையாட்டுக்கும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சிகளின் ஆரம்ப நிகழ்வில் வகை இரண்டு மற்றும் 1 சி 1எபி பாடசாலைகள், தேசிய பாடசாலைகளின் அதிபர்களையும் கலந்துகொள்ளும்படியும் வட மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago