2025 ஜூலை 16, புதன்கிழமை

கிரிக்கெட் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணிக்கு வெற்றிக்கிண்ணம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டுப் பேரவை தொடர்ந்து மூன்றாவது தடவையாக நடத்தும் 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கிரிக்கெட் அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்ககழக விளையாட்டுப் பேரவை யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடத்திய 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய  விளையாட்டுக்கழக  அணியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய  விளையாட்டுக்கழக அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

198 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பல்கலைக்கழக அணி 40.3 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீரர்களான அணித் தலைவர் ஜெயரூபன் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த களத்தடுப்பாளராக செல்ரனும் சிறந்த பந்து வீச்சாளராக ஐனார்தனும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த பங்குஜனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X