Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2011 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் எம்.எஸ்.எம்.நுஸ்கி ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வன்மை போட்டிகளில் எம்.எஸ்.எம்.நுஸ்கி முப்பாய்ச்சல் போட்டியில் 14.65 மீற்றர் துரம் பாய்ந்து முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டியில் எம்.எஸ்.எம்.நுஸ்கி மாத்திரமே கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தங்க பதக்கத்தினை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் பிரதேசத்திற்கும், தான் கல்வி கற்கும் அல்-அஷ்றக் தேசிய பாடசாலைக்கும், கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ள இவருக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.இப்றாகிம் ஆரம்பம் முதல் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.
ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.எம்.நவாஸ், எம்.பி.மஹ்றூப், ஏ.எம்.நழீம், எச்.ஜெமீல் இவாகளுடன் கல்விக் கல்லுரி கட்டுறு பயிலுனர் ஆசிரியர்களான எம்.எம்.எம்.சர்ஜுன், எஸ்.வற்சலா ஆகியோரும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெற்று பாசாலைக்கு பெருமை சேர்த்துள்ள வீரர் நுஸ்கிக்கு பாடசாலை அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மற்றம் பிரதி அதிபர்கள் தமது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago