Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எச்.எம்.கியாஸ்)
தியகம மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல போட்டியில், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன்; எம்.ஐ.எம்.மிப்ரான் 7.09 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாம் இடம்பெற்று வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுள்ளான்.
புதிய சாதனை படைத்த மிப்ரானுக்கு 10,000 ரூபா ரொக்கப் பணமும், வெற்றிக் கிண்ணமும் அத்தோடு 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டமைக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் பிரதமர் டீ.எம்.ஜயரத்னவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மிப்ரான் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2011ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் 21 வயதிற்கு உட்பட்ட நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தினை பெற்றுவெள்ளிப் பதக்கத்தையும் சுவிகரித்திருந்தார்.
நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்துவரும் எம்.ஐ.எம்.மிப்ரான் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான மாகாணப் போட்டியில் 6.90 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தினை சுவிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
MI.Mohamed Faizal Wednesday, 05 October 2011 04:38 PM
இந்த மாதம் இறுதில் நடைபெறவுள்ள இளைஞர் விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை பெருவாயா? உன்னால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பெருமையடைகின்றது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago