2025 ஜூலை 16, புதன்கிழமை

அகில இலங்கை ரீதியான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனுக்கு வரவேற்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 19வயதுக்குட்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில்; தங்கப் பதக்கம் பெற்ற நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவன் எம்.எஸ்.எம். நுஸ்கியை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன், விளையாட்டு பிரிவிற்கான பொறுப்பாசிரியர் ஐ. எல்.எம்.இப்றாஹிம், உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.மஹ்றூப், மற்றும் பிரதி அதிபர்;, ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து மேற்படி மாணவனை  வரவேற்றனர்.

அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை ரீதியான விளையாட்டுப் போட்டி நிகழ்;சி ஒன்றில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இதுவே முதற்தடையாகும். அதேவேளை, இம்முறை கிழக்கு மாகாணத்திற்குக் கிடைத்த ஒரே ஒரு தங்கப் பதக்கமும் நுஸ்கியினுடைய பதக்கமாகும் என்று அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் இங்கு பேசும் போது குறிப்பிட்டார்.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தனது வெற்றிக்குக் காரணமான அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்ற அவா தன்னிடம் இருப்பதாகவும் மாணவன் நுஸ்கி இங்கு பேசும் போது குறிப்பிட்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X