2025 ஜூலை 16, புதன்கிழமை

மைலோ வெற்றிக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் விளையாட மானிப்பாய் இந்துக்கல்லூரி தகுத

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மைலோ வெற்றிக்கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியில் 19 வயதுப் பிரிவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய மட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளவாலை சென். ஹென்றீஸ் கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் இடையே மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய மட்டப் போட்டியில் விளையாடவுள்ளது.

போட்டி ஆரம்பமாகி முடிவடையும் வரை இரு அணிகளும் சளைக்காது மோதிக்கொண்டன.   இந்நிலையில் போட்டி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவுபெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து இரு அணிகளும் புதுவேகத்துடன் களமிறங்கி மோதிக்கொண்டன. இரண்டாம்பாதி ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றியீட்டியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X