2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் லிவர்பூல் அணி சம்பியன்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடாத்திய 35 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான கால்ப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி சம்பியனாகியுள்ளது.

இவ் இறுதிப்போட்டியானது புத்தளம் சாகிறா தேசிய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்றது.
ஏற்கெனவே இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த புத்தளம் லிவர்பூல் அணியும் பலம் வாய்ந்த விம்பிள்டன் அணியும் இந்த இறுதி போட்டியில் மோதின.

முதல் பாதியில் லிவர்பூல் அணியின் முன் கள வீரர் எம். ஓ. ஜாக்கிர் தனது அணிக்கான முதலாவது வெற்றி கோலினை பெற்றுக்கொடுத்தார்.
போட்டி நிறைவு பெறும் வரையிலும் இரு அணிகளும் கோல்கள் போட எத்தனித்தும் அது கை கூடாமல் போனதால் ஒரு கோலினால் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

இவ் இறுதி போட்டியில் பிரதம அதிதியாக புத்தளம் லீக்கின் முன்னாள் தலைவர் அப்துல் ர{ஹமான் கலந்து கொண்டார்.
சிறந்த வீரர்கள், சிறந்த கோல் காப்பாளர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இரண்டாம் இடம்பெற்ற விம்பிள்டன் அணிக்கு ரொக்கப்பணத்தினை லீக் செயலாளரும், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான ஜே. எம். ஜௌசி வழங்கி வைத்தார். சம்பியனான லிவர்பூல் அணிக்கு ரொக்கப்பணத்தோடு வெற்றிக்கிண்ணத்தினையும் பிரதம அதிதி வழங்கி வைத்தார்.

இத்தொடரில், பதிவு செய்த அணி தனது அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் இல்லாமல் பிற அணிகளிலிருந்தும்  வீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தும். இரண்டாம் நடைபெற்ற விம்பிள்டன் அணியானது பிற கழக வீரர்கள் இல்லாமல் தமது அணி வீரர்களை மட்டுமே கலந்து கொள்ள செய்தமை குறிப்பிடத்தக்கது.     




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X