2025 ஜூலை 17, வியாழக்கிழமை

எழுவைதீவு பற்றிமா அணி சம்பியன்

Super User   / 2014 ஜூன் 24 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்


எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக் கழகம் தீவகப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் முகமாக தீவகம் தழுவிய ரீதியில் நடத்திய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பற்றிமா அணி சம்பியனாகியது.

இச்சுற்றுப்போட்டியில் தீவகத்தினைச் சேர்ந்த 30 கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி திங்கட்கிழமை (23) கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து ஊர்காவற்றுறை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

5 சுற்றுக்களைக் கொண்ட இந்த இறுதிப்போட்டியில், பற்றிமா அணி 3:2 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இந்நிகழ்விற்கு விருந்தினர்களாகக் கலந்துகnhண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி அன்ரன் எழிலரசி யோகநாயகம், யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர்.மோகனதாஸ், ஊர்காவற்றுறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் செல்வி.வி.தர்சினி, எழுவைதீவு முருகவேள் வித்தியாலய அதிபர் எஸ்.கமலதீபன், எழுவைதீவு றோ.க.த.க வித்தியாலய அதிபர் ப.விஜயகுமார் ஆகியோர் வெற்றிபெற்ற அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களை வழங்கினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X