2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கஜபாகு பிரிவு அணி வெற்றி

Super User   / 2014 ஜூலை 28 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகமும் ஜக்கிய அமெரிக்க நாட்டின்  கால்பந்தாட்ட வெளிவாரி சேவை நிறுவனமும் இணைந்து நடத்திய கால்பந்தாட்ட பயிற்சி முகாமினைத் தொடர்ந்ததான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை இராணுவப் படையணியின் கஜபாகு பிரிவு அணி வெற்றிபெற்றது.

3 நாட்கள் கொண்ட பயிச்சி முகாம், கடந்த 25 ஆம் திகதி முதல் வடமராட்சி கரவெட்டி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வந்தது.

இதில் கால்பந்தாட்ட வீரர்களுக்கான விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (27) வடமராட்சி வதிரி டயமன்ஸ் அணியும்  இராணுவத்தின் கஜபாகு பிரிவு அணியும் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியாட்டத்தில் கஜபாகு அணி அடுத்தடுத்து, 3 கோல்களைப் போட்டு முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளாளும் எவ்வித கோல்களையும் போட முடியவில்லை.

இறுதியில், கஜபாகு அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட  வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சி முகாமை அமெரிக்க நாட்டைச் சோந்த பயிற்றுவிப்பாளர்களான கிறேச் டேவில், மத்தியு வில்மன், சாளிஸ் சாள்ஸ் ஜோன்சன், றொட்னி பீற்றர்சன் அவன்டேவிஸ் ஆகியோர் நடத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பருத்தித்துறை பிரதேச செயலர் என்.ஜெயசீலன், பிரிகேடியர் திருநாவுக்கரசு, மேஜர் ஜெனரல் பிரியந்த ஜெயசுந்தரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி முகாமில் கலந்துகொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்களும், வீரர்களின் கழகங்களுக்கு கால்பந்தாட்ட பந்துகளும் வழங்கப்பட்டன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .