2025 நவம்பர் 19, புதன்கிழமை

மாவட்ட விளையாட்டு போட்டிகள் : தெஹியத்தகண்டி கழகம் சம்பியனானது

Super User   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்ட பிரதேச செயலக மட்ட கழகங்களுக்கிடையிலான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில், 75 புள்ளிகளை பெற்று தெஹியத்தகண்டி பிரதேச செயலகப் பிரிவு சம்பியனாக தெரிவானதுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கழகம் 37 பள்ளிகளைப் பெற்று  02 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டது.
 
அம்பாறை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (02) அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் ஓய்வு பெற்ற உதவி மாகாண பணிப்பாளர் எம்.ஜெஸ்ரின் பெரோ, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன, பிரதேசமட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்திற்குட்பட்ட கழகம் சம்பியனானதுடன், 02 ஆம் இடத்தை தெஹியத்தகண்டியை சேர்ந்த கழகம் பெற்றுக் கொண்டது.

பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் தெஹியத்தக்கண்டி பிரதேசக் கழகம் சம்பியனானது. 02 ஆம் இடத்தை உகன பிரதேசசெயலக கழகம் பெற்றுக் கொண்டது.

ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த மெய்வல்லுனராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஜே.ஏ.நுஸ்ரி தெரிவானதுடன் பெண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லனாராக தெஹியத்தக்கண்டியை சேர்ந்த எம்.ஜி.நிர்மலா குலசூரிய தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X