2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட அணி வீரர்கள் கௌரவிப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  ற.றஜீவன்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட 26 ஆவது விளையாட்டு விழாவில் 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட ஆண்கள் மென்பந்தாட்டத் துடுப்பாட்ட அணி வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வல்வை சேவா நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

இந்நிகழ்வினை வடமாகாண சபை உறுப்பினர்களான, எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன், விந்தன் கனகரத்தினம், இமானுவல் ஆர்னோல்ட், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

கம்பஹாவில் இடம்பெற்ற மேற்படி மென்பந்தாட்டத் துடுப்பாட்டப் போட்டியின், காலிறுதிப் போட்டியில் கம்பஹா அணியுடன் யாழ். மாவட்ட அணி விளையாடிக் கொண்டிருந்த போது, யாழ். மாவட்ட வீரர்களை, அம்பாந்தோட்டை அணி வீரர்கள் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளனர்.

இதனால், மனதளவில் தளர்வடைந்திருந்த யாழ். மாவட்ட வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த கௌரவிப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, யாழ். அணி வீரர்களுக்குப் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .