2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளம் லீக் அணியை வீழ்த்தி சம்பியனான லிவர்பூர் அணி

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்திய இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் லிவர்பூல் அணி சம்பியனாகியது.

இந்த இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (08) புத்தளம் சாஹிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டித்தொடரில் இறுதிப்போட்டியில்  விளையாடுவதற்கு புத்தளம் லிவர்பூல் அணி மற்றும் புத்தளம் விம்பிள்டன் அணி தகுதி பெற்றிருந்த போதும் போட்டி தினத்தன்று விம்பிள்டன் அணி வருகை தராத காரணத்தால் புத்தளம் லீக் அணியோடு லிவர்பூல் மோதும் கண்காட்சி ஆட்டமாக இந்த இறுதிப்போட்டி அமைந்தது.

லிவர்பூல் அணி 04 : 01 கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று தொடரின்  சம்பியனாக தெரிவானது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.அம்ஜத், எம்.எஸ்.நௌபி, ஏ.ஓ.அஸாம் ஆகியோர் கடமையாற்றினர்.

பிரதம அதிதிகளாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ, புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தளம் கால்பந்தாட்ட லீக் தலைவர் எச்.எம்.சபீக், செயலாளரும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான ஜே.எம்.ஜௌசி ஆகியோர் பிரதம அதிதிகளுக்கு  நினைவுச்சிண்ணங்களை வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .