2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாக்ஸ்மன் கிங்ஸ் இலவனை வீழ்த்திய மாக்ஸ்மன் பிளாக்சிப்

Super User   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட 08 பந்துப்பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிமியர்லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மாக்ஸ்மன் பிளக்சிப் அணி சம்பியானது.

இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி புதன்கிழமை (13) அட்டாளைச்சேனை  அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் மாக்ஸ்மன் பிளக்சிப் மற்றும் மாக்ஸ்மன் கிங்ஸ் இலவன் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாக்ஸ்மன் பிளக்சிப் அணி நிர்ணயிக்கப்பட்ட 08 பந்துப்பரிமாற்றங்களில் 04 இலக்குகளை மாத்திரம் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

95 ஓட்டங்களை வெற்றி இழக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாக்ஸ்மன் கிங்ஸ் இலவன் அணியினர் ஓட்டங்களை பெறுவதில் தடுமாறி 6.3 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இப் போட்டி நிகழ்வில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீப், அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதி அதிபர் எம்.ஏ.அப்துல்ஹை, ஆசிரியர் எம்.ஐ.எம்.ஹாசீம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .