2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

செப்டெம்பரில் விளையாட்டுப் போட்டிகள்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளன. நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ள இப்போட்டிகளில்,

முதலாவது கட்டம் செப்டெம்பர் 5ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை நீச்சல், கபடி, உடற்பயிற்சி, ஜீடோ, கராத்தே,  சதுரங்கம், எல்லே,  பளுதூக்கல்,  சைக்கிள் ஓட்டம் என்பன நடைபெற உள்ளன.

இரண்டாவது கட்டத்தில் ஹொக்கி, ஜிம்னாஸ்ரிக், கரம், மென்பந்து கிரிக்கெட், டெனிஸ், வலைப்பந்து, மல்யுத்தம் போட்டிகள் செப்டெம்பர் 14ஆம் 15ஆம் 16ஆம் திகதிகளிலும்,

மூன்றாவது கட்டத்தில்  உதைபந்து, குத்துச்சண்டை, எறிபந்து, மேசைப்பந்து,  பூப்பந்து,  கூடைப்பந்து, கரப்பந்து.  அரை மரதன் போட்டிகள் செப்டெம்பர் 19ஆம், 20ஆம், 21ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

நான்காவது கட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் யாவும் செப்டெம்பர் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற உள்ளமை குறிப்பித்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .