2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சாய்ந்தமருது மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எம்.முஜாஹித்


சாய்ந்தமருது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவை சந்தித்து விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர்  30 இலட்சம் ரூபாவை மைதான அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்களின் அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி மற்றும் மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவனை கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள்   ஞாயிற்றுக்கிழமை (17) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாகவும் 10 இலட்சம் ரூபா மைதானத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் இதன்போது  தெரிவித்தார்.

இதன்போது பாடசாலை மட்டத்திலான மாகாண மட்ட போட்டியில் நீளம் பாய்தல் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்ற சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவன் எம்.கே.எம்.அஷ்ரப் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினரால் விளையாட்டு உபகரணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மைதானத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X