2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இரண்டாம் தர இறுதிப்போட்டியில் யுனைற்றட் அணி அசத்தல்

Super User   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் கால்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட இரண்டாம் தர அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (17) முடிவுக்கு வந்தது.

16 அணிகள் இதில் பங்குபற்றிய இச்சுற்றின் இறுதிப்போட்டி மன்னார் பொது விளையாட்டரங்கில்  முருங்கன் பொது சன  விளையாட்டுக்கழகத்துக்கும் விடத்தல் தீவு யுனைற்றட்ட விளையாட்டுக்கழகத்துக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.

போட்டியின் பிரதம விருந்தினரான சமூக சேவையாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,  இரு அணி வீரர்கள் மற்றும் லீக் நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டு வீரர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். இதனைத்  தொடர்ந்து இறுதிப்போட்டி ஆரம்பமாகியது.

போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும்  விளையாடினர்.

போட்டியின் 8ஆம் நிமிடத்தில் யுனைற்றட் அணியின் வீரர் நிதர்சன் தமது அணிக்காக முதலாவது கோலைப் போட 26ஆம் நிமிடத்தில் மீண்டும் யுனைற்றட் அணியின் வீரர் சுரேந்  தமது அணிக்காக இரண்டாவது கோலை பெனால்டி முறையில் போடதையடுத்து இடைவேளையின்போது 02-00 ஆக  காணப்பட்டது.

இரண்டாம் பாதியில் 50ஆம் நிமிடத்தில் மீண்டும் யுனைற்றட் அணியின் சார்பில் தீபன்  மூன்றாவது கோலைப் போட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
 
இருந்தும் முருங்கன் அணியினர் இறுதிவரை கடுமையாக போராடியும் ஆட்டம் 3-0 என்ற கோல் கணக்கில் முடிவுற்றது.

2014ஆம் ஆண்டுக்கான லீக்கின் இரண்டாம் தர அணிகளுக்கிடையிலான வெற்றிக்கிண்ணத்தை விடத்தல் தீவு யுனைற்றட் விளையாட்டுக்கழகம் தனதாக்கிக் கொண்டது.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த இப்போட்டியில் யுனைற்றட் விளையாட்டுக்கழகமானது அனைவரது பாராட்டையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ்விரு அணிகளும் முதலாம் தர அணியாக தரமுயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் சமூக சேவையாளர் சார்ள்ஸ் நிhமலநாதன், மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம், மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.பர்சுக், முன்னாள் விளையாட்டு வீரர் செல்வம் மற்றும் லீக் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

லீக் செயலாளர்  என்.ஞானராஜ்யின் நன்றியுரையைத் தொடர்ந்து வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .