2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊக்கமளிக்கும் கால்பந்தாட்ட போட்டி முடிவுகள்

Super User   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வடமாகாண பின்தங்கிய பாடசாலைகளின் மாணவர்களின் விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.

அணிக்கு 7 பேர் கொண்ட இந்தக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (20) நடைபெற்றது.

இப் போட்டியில், அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழகமும் புன்னாலைக்கட்டுவன் ஈவினை கலைமகள் விளையாட்டுக் கழகமும் மோதின.

இதில், அராலி ஜேம்ஸ் விளையாட்டுக் கழக அணி 10:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

மற்றைய போட்டி முடிவுகள்
வடமராட்சி கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகமும் உரும்பிராய் சென்மைக்கல்; விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில், யங்கம்பன்;ஸ் விளையாட்டுக் கழகம் 04:02 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அராலி அண்ணா விளையாட்டுக் கழகமும் மாதகல் சென்தோமஸ் யுத் விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில், அண்ணா  விளையாட்டுக் கழகம் 03:02 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகமும் அச்செழு வளர்மதி விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில், விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் 03:02 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .